கடந்த 2005ஆம் ஆண்டு விஷால், மீரா ஜாஸ்மீன் நடித்த மாபெரும் சூப்பர் ஹிட் படமான 'சண்டக்கோழி' திரைப்படம் மாபெரும் ஹிட் ஆகியது என்பதை அனைவரும் அறிவோம். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இதன் இயக்குனர் லிங்குசாமி தயாரித்து இயக்க முடிவு செய்திருப்பதாகவும், இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்படுகி|றது.
இந்நிலையில் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கமல்ஹாசனின் இரண்டாவது மகளும், ஸ்ருதிஹாசனின் தங்கையுமான அக்ஷராஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஷமிதாப்' என்ற பாலிவுட் படத்தில் நடித்த அக்ஷராஹாசன் அடுத்த படத்தையும் இந்தியில்தான் நடிப்பார் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்த நிலையில் லிங்குசாமி தன்னுடைய படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அக்ஷராஹாசன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மீரா ஜாஸ்மினும் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து வருகின்றாராம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
-கோடம்பாக்கக் குருவி-