வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாஸ் படம் மே 29 அன்று வெளியாவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதுவரை இல்லாமல் இன்றைக்குத் திடீரென இந்தப்படத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை மாஸ் என்று மட்டுமே போட்டு விளம்பரம் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது மாஸ் என்கிற எழுத்துக்குக் கீழே சின்ன எழுத்துகளில், என்கிற மாசிலாமணி என்று எழுதியிருக்கிறார்கள். இவ்வளவு நாட்களாக இல்லாமல் ஏன் இந்தத் திடீர் மாற்றம்? படத்துக்குத் தணிக்கைத்துறையில் யு சான்றிதழ் கொடுத்துவிட்டார்களாம். யு சான்றிதழ் கிடைத்தால் அடுத்தது வரிவிலக்குக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.