'
நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் மீண்டும் புத்துணர்ச்சியுடன் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆன சிபிராஜ் அடுத்ததாக தனது தந்தை சத்யராஜுடன் இணைந்து 'ஜாக்சன் துரை' என்ற பீரியாடிக்கல் த்ரில் படத்தில் நடிக்கவுள்ளார். முந்தைய படத்தை போல இந்த படத்திலும் சிபிராஜ் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகவும், ஆனால் முழுக்க முழுக்க அந்த படத்தில் கேரக்டரில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதாகவும் சிபிராஜ் கூறியுள்ளார்.
இந்த படத்தில் முதன்முதலாக சிபிராஜுக்கு ஜோடியாகிறார் பிந்துமாதவி. மேலும் இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாசேரி (Zachery) மற்றும் கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.
'ஜாக்சன் துரை' படத்தின் கேரக்டருக்காக சிபிராஜ் சுமார் பத்து கிலோ எடையை குறைத்துள்ளார் என்பது ஏற்கனவே நாம் அறிந்ததுதான். உடல் எடையை குறைப்பதர்காக பாசு என்பவரிடம் சிபிராஜ் டிரைனிங் எடுத்து வருகிறார். இவர் பெங்களூர் ராயல் சேலஞ்ச் வீரர்களுக்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது,. மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ள இந்த படத்தை 'பர்மா' படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கவுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-