சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மாசு’. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ப்ரணிதா நடித்திருந்தார்கள்.
இப்படத்தையடுத்து தற்போது சூர்யா நடித்து வரும் படம் ‘24’. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து வருகிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘மனம்’ படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சூர்யா இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, தாத்தா, மகன், பேரன் என மூன்று வேடங்களில் நடிக்கிறாராம். இதற்காக தனது உடற்கட்டை மாற்றி அமைத்து வருகிறாராம் சூர்யா.
இயக்குனர் விக்ரம் குமார் ஏற்கனவே ‘மனம்’ படத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நாகேஷ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா என்று மூன்று பேரை தாத்தா, மகன், பேரன் என்று நடிக்க வைத்திருந்தார். தமிழில் சூர்யா ஒருவரை வைத்து மூன்று விதமான வேடங்களில் நடிக்க வைப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
ஒரே ஒரு விசயம்பா, இந்தப்படத்தையும் மாஸ் போல தத்ரூபமா எடுத்துடாதீங்க, ப்ளீஸ் .. நாங்க பாவம்யா !!
-கோடம்பாக்கக் குருவி-