சமீப காலமாக 90கள் மற்றும் 2000களின் வெற்றி திரைப்படங்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான சிவகாசி திரைப்படம் 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்ரல் மாதம் 24ஆம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.
முன்னதாகவே மறுவெளியீடான விஜயின் கில்லி,சச்சின் ஆகிய திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.