ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனிடம் எமது செய்தி சேவை வினவியது.
பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாகவே தாம் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு எதிர்வரும் 14ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள நிலையில், அதில் பங்ககொள்வது குறித்து இதுவரையில் தீர்மானிக்க வில்லை என்ற பிரதான எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இதனை எமது செய்தி சேவைக்கும் இதனை தெரிவித்தார்.
எனினும், 14ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை வெளியானதன் பின்னரே அது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.