5,516 Views
வழக்கமாக காணப்படும் நிலவை விட, இந்த "சூப்பர் மூன்" எனப்படும் இரத்தநிலவு மிகவும் பெரிதாக காணப்பட்டது. பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் சந்திரன் பூமிக்கு வெகு அண்மையில் நெருங்கி வந்தமைதான் இதற்கான காரணம் என்கிறார்கள் வானியலாளர்கள். இது இப்படியிருக்க, ஏனைய நாடுகளில் நேற்றைய தினமே இந்த இரத்தநிலவு தென்பட ஆரம்பித்த போதும், நள்ளிரவிலிருந்தே இந்து சமுத்திர நாடுகளில் இந்த சந்திர கிரகணம் தென்பட ஆரம்பித்திருந்தது.
இவ்வாறு தோன்றிய சந்திர கிரகணமானது 33 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் தோன்றியுள்ளது. இதற்கு முன்னர் 1982-ம் ஆண்டு தோன்றியிருந்ததோடு, 1900-ம் ஆண்டிலிருந்து இன்று வரையிலுமான காலப்பகுதியில் 5 முறை மட்டுமே இந்த இரத்தநிலவு வானில் தோன்றியிருக்கின்றது. இதற்குப்பின்னர் 2033-ம் ஆண்டிலேயே அடுத்த இரத்தநிலவை பார்க்க முடியும் எனவும் சொல்கிறார்கள் வானிலை ஆராச்சியாளர்கள்.
இந்தநிலையில், இலங்கையில் இன்று அதிகாலை 05:41 முதல் காலை10:52 வரை சந்திர கிரகணத்தை அவதானிக்க முடியுமென சொல்லப்பட்டிருந்த போதும், கன மழையுடனான காலநிலைச் சீர்கேடு காரணமாக இந்த ரத்தநிலவையும்சந்திர கிரகணத்தையும் எமது மக்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் எந்தளவுக்கு அமைந்தது என்பதை சரியாகச் சொல்லமுடியவில்லை எனலாம்.
*S. G. R