3,993 Views
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரியின் புதல்வர் கெரி ஆனந்தசங்கரி நேற்று நடைபெற்ற கனேடிய பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூதா தலமையிலான கனேடிய லிபரல் கட்சி சார்பில் ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில்கெரி போட்டியிட்டிருந்தார்.
கனடாவின் லிபரல் கட்சியில் தெரிவாகியிருக்கும் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையும், கனேடிய நாடாளுமன்றதிற்கு தெரிவாகியுள்ள முதல் தமிழ் ஆண் உறுப்பினர் என்ற பெருமையும் கெரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு கிடைத்துள்ளது.
கெரி ஆனந்தசங்கரி ஒரு சட்டத்தரணி என்பதுடன் சமூக ஆர்வலரும் ஆவார். இளைஞர், அகதிகள் , குடியேறியகள் தொடர்பான விவகாரங்களில் முன்னின்று செயற்பட்டவர் கெரி என்பதுடன் தனது 10 ஆவது வயதில் கனடாவில் குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது



இதேவேளை கனடா நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழர் என்ற பெருமையை கொண்ட புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபை ஈசன் இம்முறை தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று புலம்பெயர்ந்த தேசங்களில் முதலாவது தமிழ் பாராளுமன்ற என்ற பெருமையைப் பெற்ற அவரால் இம்முறை வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
மேலும் இம்முறை தேர்தலில் போட்டியிட்ட மேலும் சில தமிழர்களும் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.