2,954 Views
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2016) மார்ச் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா, சென்னை, மும்பை, டெல்லி, மொகாலி, நாக்பூர், பெங்களூர், தர்மசாலா ஆகிய இடங்களில் போட்டி நடக்கிறது.
சிவசேனா கட்சியின் போராட்டம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சமீபத்தில் கிரிக்கெட் சபை அலுவலகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகிகள் இடையே மும்பையில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த ஐ.சி.சி. தலைவர் ஜாகீர் அப்பாஸ் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம் என்று மறைமுகமாக தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
பாகிஸ்தான் அணி 20 ஓவர் உலக கோப்பையை புறக்கணித்தால் இந்தியாவில் நடக்குமா? என்ற கேள்வி எழும். சர்வதேச கிரிக்கெட் ஐ.சி.சி தான் இதுபற்றி முடிவு செய்யும்.