7,732 Views
வேதாளம் திரைப்படம் உலகெங்கும் நேற்று வெளியாகியது.
படம் சிறப்பாக ஓடிவரும் நிலையில் படம் திரையிட்ட சில இடங்களில் குழப்ப நிலை மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அஜித்தின் கோட்டையாக கருதப்படும் இந்தியாவின் மதுரையில் பஸ்கள் சேதமாக்கப்பட்ட தகவல்கள் இந்திய ஊடகங்கள் ஊடாக வெளியாகியிருந்த து.
இது மட்டுமல்லாமல் கொழும்பில் வேதாளம் படத்தை திரையிட்ட திரையரங்கமொன்றிலும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திரையரங்கின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட படங்கள் சில எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
டிக்கெட் வழங்க தாமதம் ஏற்பட்டமையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
