13,394 Views
தனது நண்பன் , பெண்ணொருவரை காதலிப்பதை பொருத்துகொள்ள முடியாத இளைஞனொருவன் அவரைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஹபரனை ஜயசேனகம பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.எச். ஓசான் விதுரங்க என்ற 23 வயதான , சுற்றுலா விடுதியொன்றில் பணிபுரியும் இளைஞனே சம்பவத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை கொலையை புரிந்ததாக கூறப்படும் , நபர் விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.
கடந்த 10 ஆம் திகதி இருவரும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த வேளையில் ஒருவர் தான் பெண்ணொருவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை பொறுக்க முடியாத அவரின் நண்பன் , மற்றையவரை கத்தியால் குத்தி , தானும் விஷமருந்தியுள்ளார்.
மேலும் தனது உறவினர்களுக்கு தகவலும் தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனவும் , இருவரும் தன்பாலின காதலர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
தனது நண்பன் , பெண்ணொருவரை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையெனவும் அதனாலேயே இவ்வாறு செய்த தாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.