Sri Lankan woman killed -in Kuwait - இலங்கை பெண் குவைட்டில் படுகொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
9,697 Views
குவைட்டில் பணிப்பெண்ணாக சென்று மர்மமான முறையில் உயிரிழந்த கெக்கிராவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனைகளில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கெக்கிராவை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான அவர், இரண்டு வருடங்களுக்கு முன்னர் குவைட் சென்றிருந்தார்.
கடந்த 5ம் திகதி அவர் குவைட்டில் இறந்துவிட்ட செய்தி அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது மரணத்தை நேரில் கண்டசாட்சியும் இருப்பது தெரியவந்துள்ளது.
பல்வேறு சித்திரவதைகளின் பின்னரே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையில் அவரர் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகி இருப்பதாக, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர மரண பரிசோதனை வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.