11,685 Views
இந்தியாவை விட்டு வெளியேறும் அளவிற்கு இந்திய நாட்டில் மத சகிப்பின்மை அதிகரித்துள்ளது என்று பொலிவுட் நடிகர் அமீர்கான் அச்சம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாலிவுட் நடிகர் அமீர்கான் உரையாற்றும்போது,
''நாட்டில் நிகழும் சகிப்பின்மை சம்பவங்களால் அச்சமடைந்துள்ளேன். கடந்த 8 மாதங்களாக நிகழும் பல்வேறு சம்பவங்களால், இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவை விட்டு வெளியேறும் அளவிற்கு எனது மனைவி கிரன் ராவ் அச்சமடைந்துள்ளார். சகிப்பின்மை சம்பவங்களைக் கண்டித்து எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், திரையுலகினர் விருதுகளைத் திருப்பி அளிப்பது, கலைஞர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று" எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , அமீர்கான் நடிப்பில் இறுதியாக வெளியாகிய 'பீகே' என்ற திரைப்படம் இந்து மத த்தை அவமதிப்பதாக கூறி அமைப்புகள் பல ஆர்ப்பாட்டம் நட த்தியிருந்தன. எனினும் அத்திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இத்தகைய ஒரு சந்தர்ப்பத்திலேயே அவர் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லையென தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தொன்றை நடிகர் ஷாருக்கானும் அண்மையில் தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.