வீரம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் அடுத்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார், இது பழைய செய்தி.
படத்தின் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. அல்லது வைக்கப்பட்டும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்குகிறது.
தற்போது சிம்புவை வைத்து குறுகியகால தயாரிப்பாக ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கவுதம் மேனன் அதை முடித்து விட்டு அஜீத் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார்.
இந்தப் படத்தில் அஜீத்துடன், சிம்புவும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. தலயின் தீவிர ரசிகரான சிம்புவை அஜீத்துக்கும் ரொம்பவும் பிடிக்கும்.
சமீபத்தில்கூட தி.மு.கவில் டி.ராஜேந்தர் சேர்ந்த செய்தி கேள்விப்பட்டு சிம்புவுடன் பேசிய அஜீத். உங்க படத்துக்கு பொலிட்டிக்கல் பிரஷர் எதுவும் வராம கவனமா பார்த்துக்குங்கன்னு அறிவுரை வழங்கினாராம்.
இப்போது ஆரம்பத்தில் ஆர்யா, வீரத்தில் விதார்த்துக்கு வாய்ப்பு கொடுத்ததைப்போல அடுத்த படத்தில் சிம்புவுக்கு கொடுக்கப் போகிறார்.
அவருக்கும் படத்தில் ஒரு முக்கியமான, அழுத்தமான பாத்திரத்தை உருவாக்குமாறு கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டிருக்கிறார். சிம்புவின் நண்பரான கவுதம் மேனனும் இன்னும் ஒரு மடங்கு உற்சாகத்தோடு களத்தில் இறங்கிவிட்டார்