இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த் ,தேவயானி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது '3BHK '. தமிழ் சினிமாவில் அதிரடி Action திரைப்படங்கள் அதிகளவில் வந்தாலும், அவ்வப்போது Feel Good திரைப்படங்களும் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
"Tourist family ' திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்தது. அந்த வரிசையில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் '3BHK '.
இதேவேளை இத்திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை திரைப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, '3BHK ' திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.