Bollywood திரையுலகின் Super Starஆன ஷாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
'War' மற்றும் 'Pathaan' திரைப்படங்கள் மூலம் புகழ்பெற்ற சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் துபாயில் 'கிங்' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இடம்பெறவிருந்த நிலையில், தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாகப் படப்பிடிப்புகள் யாவும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திரைப்படக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.