இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் 'கர'.
இத்திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்தில் மமீதா பைஜூ நடிக்கின்றார்.
இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கின்றார்.
மேலும் இத்திரைப்படத்தின் புதிய முகங்கள் என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை திரைப்பட குழு வெளியிட்டுள்ளது.
அதில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறக்கூடிய காட்சிகள் டீசர் போன்று அமைந்திருந்தது.
இந்த நிலையில் 'கர' திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தனுஷ் தன்னுடைய X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் #Karamonthbegins என்ற வாசகத்துடன் தனுஷ் முகமூடி அணிந்த நிலையில் கையில் துப்பாக்கியுடன் நிற்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
மேலும் இத்திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்பட குழு அறிவித்துள்ளது.