அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Justice For Jeni’.இதில் ஆஷிகா அசோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா, சாண்ட்ரா அனில் , சினான், பிட்டு தாமஸ், ரேகா, ஹரீஷ் பேராடி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரித்துள்ளார்; கெளதம் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.
Investigation Crime Thriller பாணியில் உருவாகியுள்ள ‘Justice For Jeni’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் Trailer வெளியாகி உள்ளது.