விக்கினேஷ் கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான 'Hot Spot' திரைப்படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 'Hot Spot 2 Much' திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகின்றது.
இத் திரைப்படத்தில் தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், எம்.எஸ். பாஸ்கர், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத் திரைப்படம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் 'Hot spot 2 much' திரைப்படத்தின் First Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.