1,627 Views
பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் பெஷாவரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இராணுவப் பள்ளிக்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பல குழந்தைகளை படுகொலை செய்யப்பட்ட பிறகு மரண தண்டனை மீதான தடை நீக்கப்பட்டது.
இதையடுத்து தூக்கு விதிக்கப்பட்ட கைதிகள் பலர் தொடர்ச்சியாக தூக்கிலிடப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொலை குற்றவாளிகள் எட்டு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.