தமிழ் மக்களின் பிரச்சினைகள் எவையும் முறையாக தீர்க்கப்படாத நிலையிலேயே தாம் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவி ஏற்று ஒருவருடம் நிறைவடைந்துள்ளது.
ஆனால் தமிழ் மக்களின் குறிப்பிடத்தக்க பல பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
குறிப்பாக அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் போனோர் விவகாரம் என்பவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
இந்த நிலையிலேயே குறித்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.