4,485 Views
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நடிகர் கமல்ஹாசன் உரையாற்றவுள்ளார்.
இதன் மூலம் அங்கு உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் பெறவுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள கமல்ஹாசனுக்கு அமெரிக்காவில் உள்ள புகழ்
பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் மரியாதை அளிக்க உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களை இந்த பல்கலைக்கழகத்திற்கு அழைத்து உரையாற்றுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் இம்முறை அந்த வாய்ப்பு நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி இப்பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று உரையாற்றுவதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.