Embilitiya youth death case - சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் பிரயோகிக்கவும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,917 Views
எம்பிலிபிட்டிய சம்பவம் தொடர்பான சந்தேக நபர் இது வரை கைது செய்யப்படாமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி வழக்கறிஞர் ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் காவல் துறையினருக்கும் சில நபர்களுக்கும் இடையிலான மோதலின் போது சுமித்த பிரசன்ன என்ற இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குறித்த இளைஞனின் உரிமைக்காக ஜனாதிபதி வழக்கறிஞர் வர்ணகுலசூரி முன்னிலையாகினார்.
29 வயதான சுமித் பிரசன்னவின் மரணம் தொடர்பாக நீதவான் பிரதேபரிசோதனையின் போது சாட்சி வழங்கிய உயிரிழந்தவரின் மனைவியின் சாட்சியின் போது, இனங்காணப்பட்ட சந்தேக நபரான காவல் துறை அதிகாரியை உடனடியாக கைது செய்யுமாறு மேலதிக நீதவான் பிரசன்ன பெர்னாண்டோ நேற்று உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டவர் தரப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன நீதிமன்றத்தில் பிரச்சன்னமானார்.
இதேவேளை எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக உயிரிழந்த சுமித் பிரசன்னவின் நண்பர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டத்தை அனைவருக்கு ஒரே விதத்தில் பிரயோகிக்கும் படி போராட்டத்தை மேற்கொண்டவர்கள் கோரியுள்ளனர்.