8,285 Views
ரஜினியின் "கைப்புள்ள" ஆனார் சிவகார்த்திகேயன்....?????
தென்னிந்திய தமிழ்த்திரையுலகம் மட்டுமல்லாமல் இந்தியா கடந்து வெளிநாடுகளிலும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சந்தோஷ தினமாக மாறியுள்ளது டிசம்பர் 12-ம் திகதி.
ரசிகர்களைத் தன் ஸ்டைல், அன்பு என்பவற்றால் கட்டிப்போட்ட தமிழ்சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தது இதே தினத்தில் என்பதே இந்தக் கோலாகலக் கொண்டாட்டத்திற்கு காரணம். இம்முறை இந்தக் கொண்டாட்டம் இன்னும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றதாகவும், இதற்கான ஒழுங்குகளை ரஜினியின் குடும்பத்தினரே செய்துவருகின்றனராம்.
சூப்பர்ஸ்டார் ரஜினி, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாள் அன்று வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ தான் இருப்பார்.ஆனால் இம்முறை "லிங்கா" படம் டிசம்பர் 12-ம் திகதி வெளியாகவுள்ளதனால் அவர் சென்னையிலேயே இருக்க வேண்டியநிலை உள்ளதால் சென்னையிலேயே அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறப்போகின்றதாம்.
இந்தப் பிறந்தநாள் விழாவில் மிகமுக்கியமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டு நேரில் வாழ்த்து தெரிவிக்கவுள்ள நிலையில், இந்த மிகமுக்கியமானவர்களின் பட்டியலில் வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் பெயரும் உள்ளடங்கியுள்ளதாம். அவர் வேறுயாருமல்ல... நம்ம சிவகார்த்திகேயன் தான் அந்தப் பட்டியலில் உள்வாங்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில் இந்தக் கொண்டாட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ள முறைப்படியாக அழைக்கப்பட்டுள்ளாராம். அதற்காக ரஜினியின் சார்பிலான அழைப்பிதழ் அவருக்கு நேரில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோடம்பாக்கத் தகவல்கள் சொல்கின்றன.
இது இவ்வாறிருக்க, சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது "காக்கி சட்டை" திரைப்படம். துரை செந்தில்குமார் இயக்கும் இந்தப்படத்தை ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்திற்கான இசையை சூப்பர்ஸ்டாரின் மருமகன் முறையான அனிருத் வழங்குகின்றார். ஒட்டுமொத்தத்தில் ரஜினியின் குடும்பம் சார்ந்த தயாரிப்பாக உருவாகின்றதாம் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த "காக்கி சட்டை".
இந்தநிலையில், டிசம்பர் 12-ம் திகதி, அதாவது ரஜினியின் பிறந்ததினத்தன்று தான் "காக்கி சட்டை"யின் பாடல் இசை வெளியீட்டுவிழாவும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சோழியான் குடுமி சும்மா ஆடுவதில்லையாமே....... உண்மையா சிவோக்கி....???
*கணேசமூர்த்தி ராகவன்.