தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தைப் பிடித்திருக்கும் த்ரிஷா, கிசுகிசுக்களிலும் தனித்துவமான இடத்தை பெற்றுக் கொண்டவர் என்பதை மறுக்க முடியாது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கதாநாயகியாக முடிந்தவரை அத்தனை ஹீரோக்களோடும் பல மொழிகளிலும் கலந்து கட்டி டூயட் பாடியுள்ள த்ரிஷ், இப்பொழுதுதான் உத்தியோகபூர்வமாக தனது மண வாழ்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
த்ரிஷாவின் அன்பர்களுக்கு இது கசக்கும் தகவலாக இருந்தாலும், பொதுவான இரசிகர்களைப் பொருத்தவரைக்கும், இனிப்பான செய்தியை தந்திருக்கிறார்.
அண்மையில் சில மாதங்களாகவே தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் இடையில் இரகசிய உறவு இருப்பதாகவும், அவர்கள் சேர்ந்தே பல இடங்களில் தோன்றுவதாகவும் பல கதைகள் கட்டவித்து விடப்பட்டிருந்தன. இணையங்களை ஆக்கிரமித்திருந்தன. சம்மந்தப்படவர்கள் தரப்பில் யாரும் வாயே திறக்கவில்லை.
இப்பொழுதுதான் அம்மணி தன் ட்விட்டர் பக்கத்தில் பாகாய்இனிக்கும் தன திருமணம் தொடர்பான செய்திகளை அள்ளிவிட்டுள்ளார்!
அதாவது, எனக்கும் வருனுக்கும் நிச்சயதார்த்தம் எதிர்வரும் 23ஆம் திகதி தனிப்பட்ட நிகழ்வாக எமது முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் நடைபெறவுள்ளது.
நடிப்பதா ? இல்லையா என்பது தொடர்பில் இன்னும் முடிவு செய்யவில்லை. இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்யவுள்ளேன். அத்தோடு எப்போது திருமணம் என்பது தொடர்பில் நானே அறிவிப்பேன் என்கிறார் த்ரிஷா!
#மணமகளே !! மணமகளே வா !!