விஜய சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். அவருகேனவும் அவருடைய அடர்தாடிக்கும், அழகு நடிப்புக்குமெனவும் பல படங்களும் கதைகளும் உருவாக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் அனைவரையும் கவர்ந்துள்ள இவர், அடுத்தடுத்து பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
நடிக்கும் படங்கள் முடிய முடிய, புதிய படங்களில் ஒப்பந்தமாகி ரணகளப் படுத்துகிறார் இவர். இப்பொழுது இன்னுமொரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார். எஸ்.யூ.அருண்குமார் இயக்கத்தில் விஜய சேதுபதியும் அவரோடு இரண்டாவது முறையாக ஜோடி போடும் நடிகையாக பெருமையோடு ரம்யா நம்பீசனும் நடிக்கவுள்ளார். இந்த ஜோடி ஆரம்பத்தில் பீட்ஸா படத்திலும் நடித்திருந்தவர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். எனவே, அதே கூட்டணி மீண்டும் இணைகின்றபோது, இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வரட்டுமே !!
-கோடம்பாக்கக் குருவி-