தொலைகாட்சி நிகழ்சிகளின் தொகுப்பாளராக அறிமுகமாகி வித்தியாசமான தன் நகைச்சுவை கலந்த பேச்சு திறனால் வெள்ளித்திரைக்கு வந்தவர் .செல்லமாக அண்ணாச்சி என்று அழைக்கப்படும் இமான் அண்ணாச்சி. சத்தமில்லாமல் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் இவருக்கும் முக்கிய இடம் உண்டு.
கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான படங்கள் மொத்தம் பத்து ஆகும் . அதே போல் இந்த ஆண்டும் பல படங்களில் படு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதில் முக்கிய படம் விஜயின் புலி .
இதில் காமடியில் கலக்கும் முக்கிய வேடம் ஒன்றாம் இவருக்கு ஏற்கனவே , புலியில் தம்பி ராமையா,ரோபோ சங்கர் நகைச்சுவைக்காக இருக்க இவரும் சேர்ந்திருக்கிறாராம். இந்த வருடம் வர இருக்கும் தான் நடிக்கும் படங்களில் புலி தனக்கு இன்னுமொரு உயர்வைக்கொடுக்கும் என்று எதிர் பார்கிறாராம் இந்த அண்ணாச்சி.
ஆக இன்னுமொரு பிஸியான காமடியன் ரெடி!!
-கந்தப்பன் பிரஷாந்த்-