ஒரு தெய்வம் தந்த பூவே பாடலோடு தனது இசையுலக வாழ்வை தொடங்கியவர் பாடகி சின்மயி. பாடகி மட்டுமில்லாமல், நயன்தாரா, தமன்னா, சமந்தா, சமீரா ரெட்டி போன்ற நடிகைகளுக்கு பல படங்களில் டப்பிங்கும் பேசியுள்ளார்.
இப்பொழுதும் பல இசையமைப்பாளர்களின் பிடித்தமான பாடகியாக நிறையப் பாடல்களைப் பாடிவரும் ஒருவர் சின்மயி.
இந்நிலையில், சின்மயி நிருபர்களோடு பேசியுள்ளார். நான் எப்போதுமே சுதந்திரமாக பேசுவதற்கு ஆதரவு கொடுக்கின்றவள். அதேசமயம் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் அவதூறு பரப்புகின்றவர்களுக்கும் நான் எதிரானவள்.
மனதளவில் நான் உறுதியாக இல்லாமல் இருந்திருந்தாலோ, எனது அம்மா மற்றும் நலவிரும்பிகளும் ஆதரவுகாட்டாமல் இருந்திருந்தாலோ, நான் அன்று நடந்த அவதூறு பரப்பும் செய்தியோடு தற்கொலை செய்திருப்பேன். அவ்வளவு மனதளவில் நான் பாதிக்கப்பட்டிருந்தேன்.
எனவே, இப்படியான ஜென்மங்களை நாம்தான் இணங்க கண்டு சட்டத்தின் கையில் ஒப்படைக்க வேண்டும். இதற்க்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், பாடகியும் பின்னணிக் கலைஞருமான சின்மயி கூறியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-