தமிழ் சினிமாவுக்கு நல்ல காலமா, அல்லது கேட்ட கிரகமா என தெரியாதளவுக்கு பல அதிசயங்கள் அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன. சில மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும், இன்னும் பல பலரின் சாபங்களுக்கு உள்ளாகி விடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த மா.கா.பா.ஆனந்த், சினிமாவுக்கும் நுழைந்தார். ஆரம்பத்தில் இரண்டு படங்களில் இணை நாயகனாக நடித்தார். படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், வேறு பட வாய்ப்புக்களை வாங்கிக் கொடுத்தன.
இந்நிலையில், இப்பொழுது வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார் மா.கா.பா. அத்தோடு, இன்னும் ஒரு துறையில் காலடி பதித்துள்ளார் ஆனந்த். மொக்கப்படம் எனும் திரைப்படத்தில் தான் இவரது பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பாடகர் ரெடி.
இறைவா... என அழுது புலம்புகின்றவர்கள் ஒவ்வொருவரும் என் மனதில் வந்துதான் போகிறீர்கள். என்ன செய்ய? நம்ம நிலைமை இப்பிடி...
-கோடம்பாக்கக் குருவி-