2,538 Views
அந்த மரியாதைதான் உத்தமவில்லன் படத்துக்கு வந்த தடைகளை எல்லாம் விலகி ஓட வைத்திருக்கிறது.விஸ்வரூபம் பட விவகாரத்தில் கமலை பழிக்குபழி வாங்க உத்தமவில்லன் படத்தை முடக்க சிலர் திட்டமிட்டனர்.
அதனால் பாதிப்பு கமலுக்கு இல்லை, அப்படத்தைத் தயாரித்த லிங்குசாமிக்குத்தான் என்று தெரிந்தும் கழுத்தறுக்கக் காத்திருந்தனர். ‘கொம்பன்’ படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது திரையுலகம் ஒன்றுகூடியதுபோல் ‘உத்தமவில்லனு’க்கும் ஆதரவு தெரிவித்து அனைத்து அமைப்புகளும் கைகோர்க்க எதிர்ப்பாளர்கள் தெறித்து ஓடிவிட்டனர்.
உத்தமவில்லன் படம் ரிலீஸாவதில் இப்போது எந்த சிக்கலும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.இதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸாவது உறுதியாகிவிட்டது.
உத்தமவில்லன் படம் கடந்த வாரம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. உத்தமவில்லன் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் படத்துக்கு ஒரு கட் கூட இல்லாமல் யு சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
தடைகள் நீங்கிய உற்சாகத்தோடு உத்தமவில்லன் படத்துக்கு தியேட்டர்களை புக் பண்ணி வருகிறார்கள். சத்யம் சினிமாஸ், ஐநாக்ஸ், அபிராமி, தேவி, கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி, உதயம் காம்ப்ளக்ஸ், பிவிஆர், சங்கம் என சென்னையிலுள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்தும் உத்தமவில்லன் படத்துக்காக புக் பண்ணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் உத்தமவில்லன் படம் உலகமெங்கும் 1500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதாம்.
=== CASTRO RAHUL ===