காற்றுக்கு பலியாகும் பச்சிளம் குழந்தைகள்
காற்று மாசாவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக யுனிசெப் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. காற்று மாசுபாடு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்திய யுனிசெப் சுகாதார பிரிவு, தெற்கு ஆசியாவில் ஏராளமான குழந்தைகள் காற்று மாசு மிக்க பகுதிகளில் வசிப்பதாக கூறியுள்ளது. சர்வதேச அளவில் சுமார் 1 கோடியே 70 லட்சம் குழந்தைகள் காற்றுமாசு மிக்க பகுதிகளில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் 1 கோடியே 22 லட்சம் குழந்தைகள் தெற்கு ஆசியாவில் தான் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது உலகில் அதிக சனத்தொகை உள்ள நாடான சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது
காற்று மாசுபாட்டால் உருவாகும் நச்சுகாற்றானது, குழந்தைகளின் நுரையீரலை பாதிப்பதோடு,மூளை வளர்ச்சியையும் சிதைப்பதாக எச்சரித்துள்ளது அதுமட்டுமல்லாது யுனிசெப் அறிக்கையில், காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்கு உட்பட்ட 920,000 குழந்தைகளின் இறப்புக்கு வழிவகுத்துள்ளது
என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே காற்று மாசு அதிகமுள்ள இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதை பெற்றோர்கள்தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் உரிய நேரத்தில் தடுப்பூசி போடுவது உள்ளிட்ட செயல்களின் மூலம் நோய் பாதிப்பிலிருந்து மீளலாம் என யுனிசெப் அறிவுறுத்தியுள்ளது.