மறுக்கிறார் நாமல்!
Namal denies allegations - மறுக்கிறார் நாமல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அக்குணுகொல பெலேஸ்ஸ நகர மண்டபத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சி கூட்டத்தில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து வந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கியை எடுத்து வந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி குற்றவிசாணை திணைக்களத்தில் அதிகாரிகள் தீவிரவிசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
காவல்துறை மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பாக எமது செய்திச் சேவை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் என கூறப்படும் சந்தேகநபர் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டார்.
அந்த சம்பவம்தொடர்பாக நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தயாரிக்குமாறு தாம் கோரியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.