அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர் தான் பிரபல animation திரைப்படமான (கோச்சடையான் போல அரைகுறையாக அல்ல) Frozen படத்தில் வரும் இளவரசி எல்சாவை போல் உள்ளதாக கூறி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ப்லொரிடா நகரை சேர்ந்த அன்னா ஃபைத் கால்சன் (Anna Faith Carlson) என்பவர், தான் Frozen திரைப்படத்தில் வரும் இளவரசி எல்சாவை போல் உள்ளதாக தெரிவித்து தன் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்னா கால்சன் சொல்கிறார் , நான் இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அதில் நடித்ததாகவே உணர்வதாகவும், இந்த புகைப்படத்தினால் கிடைத்த பெருமை மூலமாக எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
இவரது சகோதரி படத்தில் வரும் இளவரசியின் தங்கை அன்னா போல ஆடைகள் அணிந்து சிறு குழந்தைகள் மற்றும் புற்று நோயாளிகளை மகிழ்வித்துவருகிறார். இவ்வாறு குழந்தைகளுக்காக நடித்து அவர்கள் முகத்தில் சிரிப்பை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் நம்ப முடியாமல் இருந்தாலும், உண்மை என்பதால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும் !

இனி அன்னாவுக்கு வாய்ப்புக்கள் வரும் போலவே தெரிகிறது.
அன்னாவும் விடாமல் விதவிதமான தனது படங்களை இணையத்தில் ஏற்றி வருகிறார்.