வீரம் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் நம்ம அனிருத். இந்தப் படத்துக்காக தெலுங்கு மற்றும் தமிழில் வந்த பல வாய்ப்புக்களை உதறியவர் அனிருத் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அஜித் படத்துக்காக பரபரப்பாக உழைத்துவரும் அனிருத், கடந்த முதலாம் திகதி அஜித்துக்கு வாழ்த்துச் சொன்னதோடு இன்னுமொரு விடயத்தையும் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதாவது அஜித்தின் படத்துக்கான தீம் இசையும், அறிமுகப் பாடலும் இப்பொழுதே தயாரிக்கப்பட்டு விட்டதாக ட்விட் செய்துள்ளார்.
அஜித் என்று சொன்னாலே அவரது படங்களில் வரும் தீம் இசையும் பெயர் போனது என்பது நமக்குத் தெரியும். அவரது இந்தப் படமும் எதற்கும் குறைந்த படமல்ல என்பதற்காகவே இந்த கடின உழைப்பு என்கிறார் அனிருத்.
-கோடம்பாக்கக் குருவி-