ஐயய்யோ.... என்னங்க நீங்க? தப்பா எல்லாம் தலைப்பை பார்த்து யோசிக்கிறீங்க. அப்பிடி எதுவும் இல்லை. சிவா ரொம்ப நல்ல பையன். விஷயம் இதுதான். குழம்பாதீங்க...!!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தன்னுடைய திறமைகள் மூலம் வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, மளமளவென முன்னுக்கு வந்த சிவா, இப்போது முன்னணி நட்சத்திரப் பட்டியலை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறார்.
இவர் தற்போது படக்கம்பெனி ஆரம்பித்து படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். தனது நண்பரும் மேனேஜருமான ஆர்.டி.ராஜாவுடன் இணைந்து புதிய படக்கம்பெனி துவங்கி, அதில் தானே ஹீரோவாக நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார்.
இந்த நானறிந்த விசயத்தைதான் உங்களுக்கும் சொல்ல வந்தேன். இது தப்பா? சிவாவுக்கு மச்சங்கள் பல போல...!!![]()
-கோடம்பாக்கக் குருவி-