அஜித் விஜய் இரசிகர்கள் அடிக்கடி மோதிக்கொள்வது தெரியும். நடிகர்கள எப்படி ஒற்றுமையா இருந்தாலும் இரசிகர்கள் விட்டபாடில்லை. ஆனாலும், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தல அஜித்தின் 44வது பிறந்தநாள் நேற்று அவரின் ரசிகர்களால் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. அன்ன தானம், ரத்த தானம், மரம் நடுதல் என ரசிகர்கள், ஒரே நாளில் பல நல்ல விஷயங்களை செய்து அசத்திவிட்டனர்.
விஜய் - அஜித் இடையே நேரடியாக போட்டி இல்லாவிட்டாலும், அவரின் ரசிகர்களுக்கிடையே 'யார் அடுத்த சூப்பர் ஸ்டார் ? என ஒரு பெரிய கலவரமே நடக்கும். இந்நிலையில், நேற்று அஜித் பிறந்தநாளுக்காக நடந்த ரத்ததான முகாமில் சில விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சர்யபடவைத்தது. என்னதான் போட்டி இருந்தாலும் சில ரசிகர்கள் ஒற்றுமையாக இருகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.
இப்படியாக,சண்டையிட்டுக் கொள்ளாமல் நல்ல காரியங்களில் இந்த இரசிகர்கள் இறங்கினால் எல்லோருக்குமே நல்லது.
-கோடம்பாக்கக் குருவி-