பிரித்தானியாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேட்ரிவ் கட்சி புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளது.
வார இறுதி நாட்களில் இந்த பட்டியல் பிரதமரால் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்ஜ் ஒஸ்பேர்னுக்கு சிரேஷ்ட்ட அந்தஸ்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரேசா மேய் தொடர்ந்தும் உள்விவகார செயலாளராக செயற்படவுள்ள அதேநேரம், பிலிப் ஹமண்ட் வெளிவிவகார செயலாளராகவும், மைக்கல் ஃபெலன் பாதுகாப்பு செயலாளராகவும் தொடரவுள்ளனர்.
இதற்கிடையில் கட்சியின் தோல்வியை அடுத்து, தொழில் கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.