புகழைத் தாண்டிய மக்கள் நம்பிக்கை: விஜய்யின் வெற்றி குறித்து சிம்பு நெகிழ்ச்சி!
திரைத்துறையைக் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தளபதி விஜய். அவரது சாதனைகள் மற்றும் வெற்றிகள் குறித்துத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் (STR) சமீபத்தில் பகிர்ந்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு நடிகராகப் பிரபலம் அடைவது எளிது, ஆனால் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தனை சுலபமல்ல. அதைத் தனது உழைப்பால் சாதித்துக் காட்டியவர் விஜய்.
விஜய் அண்ணாவின் சினிமாப் புகழும் இமேஜும் உலகறிந்த ஒன்று. ஆனால், அதையெல்லாம் தாண்டி மக்கள் அவர் மீது வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையே அவரது உண்மையான பலம்.
"மக்களுக்கு அவர் மேல நிறைய நம்பிக்கை இருந்தது, அதான் அவர் வெற்றி பெற்றார்" எனச் சிம்பு மனப்பூர்வமாகப் பாராட்டியுள்ளார்.
பிரபலம் என்பதைத் தாண்டி, மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிப்பதே ஒரு தலைவனுக்கு அல்லது மனிதனுக்குக் கிடைக்கும் மிகப்பரிய வெற்றி என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது