காதலால் ஒரு கொலை
Murder due to Love affair - காதலால் ஒரு கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
வத்தளை நகரத்தில் ஆடையகம் ஒன்றில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து சம்பவத்தில் யுவதி ஒருவர் பலியானார்.
சம்வத்தை தொடர்ந்து கத்திகுத்து தாக்கதலை மேற்கொண்டவர், அந்த இடத்திலேயே தமது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில், அவர் தற்போது காவல்துறை பாதுகாப்பில் ராகம மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
காதல் தொடர்பு காரணமாகவே இந்த கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பலியானவர் 19 வயதான வத்தளை ஹ_ணுபிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வயதான சந்தேக நபர் லபுக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரது நிலமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.