கோத்தாவிடம் விசாரணை
Gota being grilled - கோத்தாவிடம் விசாரணைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த மாதம் 23 ஆம் திகதியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர், ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்றைய தினம் ஆணைக்குழுவின் முன்னாள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மிஹின் லங்கா வானூர்தி சேவையின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற கொடுக்கல் வாக்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவிடம் அழைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த விடயங்களை தொடர்ந்தும் ஆராய வேண்டியுள்ளதன் காரணமாக அதற்கான கால அவசியம் என அவரின் சட்டத்தரணிகள் ஊழல் மோசடி ஆணைக்குழுவிடம் கோரியுள்ளனர்.
ஜே.வி.பி. கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் பல முறைப்பாடுகளை முன்வைத்திருந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீதும் சில முறைப்பாடுகளை பதிவு செய்தது.