3,912 Views
அதே பிரதேசத்தைச் சேர்ந்த மான்னகே தொன் துஷாரி வாசனா என்ற 48 வயதான பெண்ணொருவரே கூரிய ஆயுத த்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டிருந்தார்.
3 பிள்ளைகளின் தாயாரான அவரின் கணவர் பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இக் கொலை இடம்பெற்ற தினத்திலிருந்து அப்பகுதியில் மருந்தகமொன்றை நட த்திவந்த நபரொருவர் அங்கிருந்து மாயமாகியிருந்தார்.
மேலும் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த நாய் சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள குறித்த நபரின் மருந்தகத்தின் முன் சென்று நின்றிருந்தது.
இந்நிலையில் குறித்த மருந்தகத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் , இக் கொலையை தானே புரிந்துள்ளமையையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதுதவிர மேலும் தகவல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார்.
தான் குறித்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பை பேணிவந்த தாகவும், அவரின் வீட்டிலேயே வாழ்ந்து வந்த தாகவும் தெரிவித்துள்ளார்.
தன் மனைவி , பிள்ளைகளை பிரிந்து விட்டதாகவும் , தமது தொடர்பு தொடர்பில் துஷாரியின் பிள்ளைகள் உட்பட குடும்பமே அறியுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் துஷாரிக்கு தானே கடையை தனது செலவில் அமைத்துக் கொடுத்ததாகவும் , சம்பவதினத்தன்று இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் பழம் வெட்டும் கத்தியால் அவரைக் குத்தியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.