முழு தலைக்கவசம் அணிதல் தொடர்பான சட்டத்தை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடையுத்தரவு எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
முழு தலைகவசம் அணிந்து உந்துருளிகளை செலுத்த கூடாது என்ற வகையிலான சட்டம் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதிமுதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த சட்டத்திற்கு எதிராக இரண்டு பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.