நியூசிலாந்து நாட்டை சேர்ந்த 11 வயதான விக்டோரியா என்ற சிறுமி அந்த நாட்டின் பிரதமரான ஜெசிந்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில், தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டொலர்களையும் வைத்து,அனுப்பியிருந்தார்.
சிறுமியின் இந்த கடிதத்தை வேடிக்கையாக நினைத்து, புறக்கணிக்காமல் பிரதமர் ஜெசிந்தா சிறுமிக்கு பதில் அனுப்பியுள்ளார். விக்டோரியா என்ற அந்த சிறுமியின் கடிதத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் ஜெசிந்தா டிராகன்கள் ஆய்வு குறித்து எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் அதனை திருப்பி தந்து விடுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டிருந்தார்.