நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு விஸ்வாசம், ஐரா,மிஸ்டர் லோக்கல் எனத் திரைப்படங்கள் வெளியான நிலையில், அவருடைய அடுத்த படமான 'கொலையுதிர் காலம்' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், திரைப்படம் , ஜூன் 14ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, திரைப்படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.