அமெரிக்காவின் மஸாச்சேட்டஸ் பகுதியில் வீடு ஒன்றில் திருடுவதற்காக வந்த திருடன் ஒருவன், அந்த வீட்டின் படுக்கையறை, கழிவறைகளை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளமையே பெரும் ஆச்சரிய சம்பவமாக பதிவாகியுள்ளது.
நேட் என்ற 44 வயதான ஒருவர், தனது 5 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை மகனுடன் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பியபோது, ஆச்சரிய படவைக்கும் சம்பவம் ஒன்று அங்கே நடந்துள்ளமையை அவர் அவதானித்துள்ளார்.
அவரது வீட்டிற்கு வீட்டின் பின் வாசல் வழியாக வந்த திருடன் ஒருவன், இவரது வீட்டில் இருந்த பொருட்களை திருடாமல் வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளமையே அந்த விசித்திர சம்பவம். இந்த ஆச்சரிய சம்பவத்தை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், வீட்டின் பின் வாசல் வழியாக நுழைந்த திருடன் அங்கு திருடாமல், அதற்கு பதிலாக கலைந்து கிடந்த எனது வீட்டை சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளான்.
எனது படுக்கையறை, கழிவறை, எனது மகனின் விளையாட்டு பொம்மைகள் ஆகியவற்றை சுத்தம் செய்து ஒழுங்கு படுத்தியுள்ளான். இது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், திருடனின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.