சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான படமான '36 வயதினிலே' திரைப்படம் ஜோதிகா மட்டும் ரீ எண்ட்ரி ஆன திரைப்படமல்ல. விருமாண்டி' அபிராமிக்கும் இந்த படம் ஒரு ரீ எண்ட்ரியை கொடுத்துள்ளது என்பது தான் உண்மை.
கடந்த 2004ஆம் ஆண்டு சைக்காலஜி பட்டப்படிப்பு படிக்க அமெரிக்க சென்ற நடிகை அபிராமி பின்னர் சிறுவயதில் இருந்தே காதலித்து வந்த ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் உள்ள மல்டிநேஷனல் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்ட்டிங் அதிகாரியாக பணிபுரிந்தார். இவரை மீண்டும் கண்டுபிடித்து அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தவர் கமல்ஹாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விருமாண்டி படத்தை முடித்த பின்னர் அமெரிக்கா சென்று விட்ட அபிராமியை 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் டப்பிங் பேசுவதற்காக மீண்டும் இந்தியா வந்த அபிராமிக்கு '36 வயதினிலே' படத்தின் முக்கிய கேரக்டரான சூசன் என்ற கேரக்டரில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் இந்த கேரக்டரில் நடித்த அபிராமிக்கு ரசிகர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அபிராமி கொடுத்த ஒரு பேட்டியில், 'தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவிற்கு திரும்ப தயாராக இருப்பதாகவும், தனக்கு ஒரு நல்ல சயன்ஸ் பிக்ஷன் திரைப்படத்தில் நடிக்க விருப்பமுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-