Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
பாலியல் லஞ்சமும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும்..! வெளிச்சத்துக்கு வரும் வெளிவராத தகவல்கள்..!

srilanka Women's cricket team sexual favours - பாலியல் லஞ்சமும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும்..! வெளிச்சத்துக்கு வரும் வெளிவராத தகவல்கள்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,248 Views
இலங்கை எனும் குட்டித் தீவினில் எத்தனை கெட்டிக் காரர்கள் என்று சர்வதேசமே வியந்து நோக்கியது -1996 ல் அர்ஜுனா ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி உலக கிண்ணத்தை கைப்பற்றியபோது.
கிரிக்கெட் என்பது அதுவரை இலங்கையில் அவ்வளவு உச்சம் தொட்டிராவிட்டாலும் 1996 ம் ஆண்டு மார்க் டெய்லர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்றியது முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் பெருமை உலகளாவிய ரீதியில் பேசப்பட்ட ஆரம்பித்தது.

பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களை தங்கள் கனவு நாயகர்களாக எண்ணிக்கொண்டு கல்லூரி அணிகளில் களமாடி இலங்கை தேசிய கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து விடவேண்டும் என்பதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளும் இளசுகள் இந்த நாட்டில் ஏராளம் ஏராளம் எனலாம்.

பிரபல கல்லூரிகளில் அனுமதியைப் பெற்று தங்கள் பிள்ளைகளை எதிர்காலத்தில் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிக்குள் இணைத்துவிட வேண்டும் எனும் கனவு காணும் பெற்றோர்களுக்கு பேரிடியாய் கிடைத்த செய்திதான் பாலியல் லஞ்சம் என்ற விரும்பத்தகாத விடையம்.

இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணியில் தாங்கள் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கும் தங்கள் நிலையை தொடராக அணியில் தக்க வைப்பதற்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களுக்கு பாலியல் லஞ்சம் கொடுக்கபடுகிறதாம்.....???


இது கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் பேரதிர்ச்சியை உண்டுபண்ணிய விடையமாகும்.

அதுவரை காலம் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒழித்து மறைத்து வைத்த விடையத்தை துணிந்து தெரிவித்த மகளிர் வீராங்கனையின் தகவலை ஆதாரமாக கொண்டு இலங்கையின் ஊடகங்கள் மூலமாக செய்திகள் கசிய ஆரம்பித்தன.

இந்த நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நவீன் திஸ்ஸாநாயக்கவின் அதிரடி நடவடிக்கையின் பிரகாரம் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நிமல் திஸாநாயக்க தலைமையிலான 3 பேர்கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த குழுவினரின் இறுதி அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு வீராங்களைகள் பாலியல் ரீதியில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அணியில் உள்வாங்கபடுவர் எனும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது என்பதுதான் இப்போதைய நிலையில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகியிருக்கிறது.

எது எவ்வாறாயினும் இனிவரும் நாட்களில் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் இனம்காணப்பட்டு பெரியளவில் தண்டிக்கப்படுவதன் மூலம் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அந்த கறையை நீக்கி மகளிர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு எல்லோரும் முன்னின்று உழைக்க வேண்டிய தேவை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது எனலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top