விமல்,பிரியா ஆனந்த், சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
பிரியா ஆனந்த் மட்டுமில்லாமல்,
இனியா, விசாகா சிங் ஆகியோரும் ஒன்றல்ல மூன்று லட்டு என்று கலக்கியுள்ள படம் இது.
இந்த படத்தின் பாடல் இறுவட்டு வெளியிட்டு விழா சென்னையில் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது. இதில் விமல், பிரியா ஆனந்த்,இமான் மற்றும் விழாவுக்கு வருகை தந்த நடிகர்கள் என நிறையப்பேர் கலந்து கொண்டிருந்தனர் ....
இந்த மேடையில் தான் வந்திருந்த நடிகர்களை மட்டும் இல்லாம, எங்களையும் பொறாமைப்பட வைக்கிற மாதிரி நாயகி பிரியா ஆனந்த் வில்லங்கமான தன்னோட நீண்டநாள் ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார்.
அதாவது, பிரியா ஆனந்த்துக்கு நீண்டநாளாக டி.இமானின் கொழுக் மொழுக் கன்னத்தை பிடித்து கிள்ளவேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். இதை தனது படக்குழுவினரிடம் அடிக்கடி சொல்லியும் வந்திருக்கிறார்.
அவருடைய இந்த ஆசையை படவிழாவில் இயக்குனர் ஞாபகப்படுத்த, பிரியா ஆனந்தும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று விழா மேடையிலேயே டி.இமானின் கன்னத்தை பிடித்து சுச்சும்மா, பிச்சுக்குட்டி, செல்லக்குட்டி என்று கிள்ளி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
அழகான பொண்ணு கன்னத்தை கிள்ளும்போது யாருக்கு தான் சந்தோசம் இல்லை...
.jpg)
ஆனால் இங்கு தான் இமானுக்கு வில்லங்கமே. ஏற்கனவே திருமணமானவர் இசையமைப்பாளர் டி.இமான். அதனால் வீட்டிற்கு போனால் என்ன ஆகுமோ எண்டு பயந்தாராம்,இன்று வீட்டுக்கு சென்றால் மனைவியிடம் உதை வாங்குவது உறுதி என விழா மேடையிலேயே தனது பயத்தையும் வெளிக்காட்டிக் கொண்டார் இசையமைப்பாளர் டி.இமான்.
என்ன செய்ய......? ஆனானப்பட்ட அரசனே ஆனாலும் மனைவி எண்டு வரும்போது அடங்கித்தானே போகவேண்டியிருக்கு, அதுவே உலக நியதியும் கூட......