5,510 Views
சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற நபரொருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திவிதுரவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபரொருவர் , 11 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட முயன்றுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குற்றத்தை புரிய முயன்றவர் 32 வயதான 3 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபருக்கு எதிராக சட்ட த்தை அமுல்படுத்தக் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.