சூரியன் எப்.எம் வானொலி இன்று 2015 ஜூலை 25ஆம் நாளில், தமது 17வது அகவையில் தடம் பதிக்கிறது.
1998ஆம் ஆண்டு நிறுவனத் தலைவர் ரெனோர் சில்வாவின் தீர்க்க தரிசனமான எண்ணக் கருவில் ஆரம்பிக்கப்பட்ட சூரியன் வானொலி இன்று தனது 17வது அகவையை கொண்டாடுகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் கடந்து வந்த காலத்தில் உண்மைச் செய்திகளையும், தரம் மிக்க தனித்துவமான நிகழ்ச்சிகளையும், வழங்கிய வகையில், இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியாக சூரியன் எப் எம் வானொலி அன்றும், இன்றும் என்றும் முதன்மை இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.
இதன் மூலம், நேயர்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும் இடையே இருந்த தூரம் குறைந்து, சூரியன் எப் எம் வானொலியை நேயர்கள் தமது குடும்ப வானொலியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
நேயர்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் வென்றுள்ள சூரியன் எப் எம், தரப்படுத்தல்களிலும், விளம்பரதாரர்களின் ஒத்துழைப்பிலும், நேயர்களின் அபிமானத்திலும் எப்போதும் முதலிடத்திலேயே இருந்துக்கொண்டிருப்பது சூரியனுக்கு கிடைத்துள்ள வரபிரசாதமாகும்.
இந்த முறை சூரியன் தனது 17வது அகவையை முன்னிட்டு மட்டக்களப்பில் மிக பிரமாண்டமான முறையில், இந்திய நட்சத்திரங்களான அபே ஜோர் புர்கார், அனிதா, ஜானகி ஐயர் மற்றும் பிரபு ஆகியேரின் நேரடி படைப்பிலான இசை நிகழ்ச்சியை நிகழ்த்துகிறது.
இது தவிர வானொலியில் காலை முதல் மாலை வரையில் தொடர்ச்சியாக அழைக்கும் அத்தனை நேயர்களுக்கும் பெறுமதியான பரிசில்களை வழங்கும் புதுமையான பிரமாண்டமான பரிசு வழங்கும் திட்டம் ஒன்றையும் சூரியன் முன்னெடுத்துள்ளது.
அத்துடன், இணையதள வழியாக சூரியனை கேட்டுக்கொண்டிருக்கும் நேயர்களுக்காக ஆயிரக்கணக்கான பரிசுகள் தினந்தோறும் ஒரு பரிசு போட்டி மூலம் வழங்கப்படுகின்றன.
17 வருடங்களாக தன்னுடன் இணைந்திருந்து மேன்மைக்கு வழிவகுத்த அத்தனை உறவுகளுக்கும் சூரியன் நன்றி தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.